Newsமனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

-

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனக்காக தனது கோடீஸ்வரக் கணவர் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டுபாயைச் சேர்ந்த 26 வயதான சௌடி அல் நாடக் என்ற பெண் இங்கிலாந்தில் பிறந்தவர் இவர் டுபாயில் உள்ள கோடீஸ்வரரான ஜமால் அல் நாடக் ஐ திருமணம் செய்துள்ளார். இருவரும் டுபாயில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளனர். சௌடி தற்போது முழுநேர இல்லத்தரசியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தபோதிலும்கூட சௌடி அல் நடாக் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக்கில் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரின் இணையதள வீடியோக்கள் மூலம் அவரின் ஆடம்பர வாழ்க்கையை பிரபலபடுத்தி வருகிறார். உதாரணமாக வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டங்கள், ஆடம்பரமான இரவு உணவுகள், டிசைனர் பொட்டிக்குகளில் ஷொப்பிங் செய்தல் போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு சௌடி மிகவும் பிரபலம்.

மேலும், இந்த ஜோடி 10 லட்சம் டொலர்களுக்கு ஒரு வைர மோதிரம் வாங்கியது, 20 லட்சம் டொலர்களுக்கு ஓவியம் வாங்கியது உள்ளிட்ட வீடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தற்போது அவரது கணவர் தனித் தீவு வாங்கித் தந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒருவாரத்துக்குள்ளாகவே, அந்த வீடியோ 24 இலட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...