Cinema'Harry Potter' படங்களில் நடித்த பிரபல நடிகை Maggie Smith காலமானார்

‘Harry Potter’ படங்களில் நடித்த பிரபல நடிகை Maggie Smith காலமானார்

-

J K Rowling எழுதிய நாவல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட Harry Potter திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை Maggie Smith [89 வயது] காலமானார். இவர் வயது மூப்பு காரணமாக செப்டம்பர் 27 அன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட Maggie Smith குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த Maggie Smith 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

The Prime of Miss Jean Brodie மற்றும் California Suite ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். Harry Potter ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...