விசித்திரமான மற்றும் மிகவும் அரிதான பல உயிரினங்கள் நீருக்கடியில் உள்ளன. அத்தகைய உயிரினங்கள் நம் கண் முன்னே தோன்றும்போது, நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.
அதேபோன்று தான் சமீபத்தில், சிலர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கொக்கியில் ஏதோ விசித்திரமாக ஒன்று சிக்கியுள்ளது. இதையடுத்து தண்ணீருக்குள் பார்த்தபோது, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ஒரு பெரியளவிலான மீன் ஒன்று சிக்கி இருந்தது. அந்த மீன் Giant sturgeon fish என்று அழைக்கப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வியப்பூட்டும் வகையில் உள்ள வீடியோக்களை வெளியிடும் @AMAZlNGNATURE என்ற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், வீடியோவில் தெரியும் Giant sturgeon fish, ஒரு முதலை அளவுக்கு உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ 22 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த Giant sturgeon fish மீன்கள், 10 அடி நீளம் மற்றும் 227 கிலோ எடை வரை வளரும் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.