Breaking Newsஇன்று முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து 1000 Work and Study VISA

இன்று முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து 1000 Work and Study VISA

-

ஆஸ்திரேலியாவில் வேலை மற்றும் படிக்க விரும்பும் 1000 இந்தியர்களுக்கு இன்று முதல் 1000 வேலை மற்றும் படிப்பு விசா வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இன்று (1) முதல் இந்திய பிரஜைகளுக்கு வருடாந்தம் 1,000 வேலை மற்றும் படிப்பு விசாக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தகுதியான இந்தியர்களுக்கு ஆஸ்திரேலியாவில் 12 மாதங்கள் வேலை செய்யவும் படிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆஸ்திரேலியா-இந்தியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (AI-ECTA) படி இந்த வகை விசா வழங்கப்படுகிறது.

18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், மேலும் அந்த காலகட்டத்தில் இந்தியர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டை விட்டு வெளியேறலாம்.

இதற்கான கட்டணம் AUD 650 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இந்தியர்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்கலாம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...