Melbourneமெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

மெல்பேர்ணில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இலங்கை மாணவர்

-

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் யெல்லிங்போ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து செப்டம்பர் 29ஆம் திகதி மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இளைஞனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேர்விக் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய Stefan Andrew என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் இறந்துவிட்டதாகவும் விக்டோரியா போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபன் ஒரு தீவிர கார் ஆர்வலர் என்பதும், விபத்து நடந்தபோது அவர் மிகவும் விரும்பிய வாகனத்தை ஓட்டிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் இலங்கையில் உள்ள அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்காக உடலை மெல்பேர்ணுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளனர்.

Latest news

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

1,000 வேலை வெட்டுக்கு தயாராகும் NSW போக்குவரத்துத் துறை

ஒரு பெரிய நிறுவன மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக, NSW-க்கான போக்குவரத்துத் துறை 1,000க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல்...