அவுஸ்திரேலியா உட்பட 35 நாடுகளுக்கு இன்று (ஒக்டோபர் 01) முதல் விசா இன்றி இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை 06 மாத காலத்திற்கு அந்தந்த நாடுகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்த விசா சலுகை கிடைக்கும்.
மேலும், சீனா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் விசா இன்றி இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய அண்டை நாடுகளுடன் போட்டித்தன்மை கொண்ட சுற்றுலாத் துறையை கட்டியெழுப்புதல் மற்றும் 2024 ஆம் ஆண்டளவில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை எட்டுவதற்கான நோக்கத்துடன் இலவச விசா சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஈ-விசா சேவையை நிர்வகிப்பதில் இலங்கை சிக்கல்களை எதிர்கொண்டது மற்றும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி முதல் ஈ-விசா முறை இடைநிறுத்தப்பட்டது.
ஆனால் புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டதையடுத்து, பழைய விசா முறையே ஆரம்பிக்கப்பட்டது.