Cinemaநீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

நீங்கள் தான் அடுத்த தளபதியா?- ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்

-

சின்னத்திரை தொகுப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

தரமான படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகனாக மாறியுள்ளார்.

கோட் படத்தில் விஜயுடனான இவரது கேமியோ கதாபாத்திரம் திரையரங்குகளில் விசில் பறக்க செய்தது.

இதனைத்தொடர்ந்து, இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்திய பட பிரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனை நோக்கி ரசிகர்கள் “அடுத்த தளபதி” என்று கோஷமிட்டனர்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், “ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார் தான். இந்த அடுத்த.. அதெல்லாம் வாய்ப்பே கிடையாது.

அவங்க சினிமாக்களில் பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்திருக்கேன், அவங்கள மாதிரி நல்ல படங்கள் பண்ணி ஹிட் கொடுத்து ஜெயிக்கணும்னு நினைக்கலாம். அவங்களாவே ஆகணும்னு நினைக்கிறது சரி கிடையாதுனு நான் நினைக்குறேன்” என்று கூறினார்.   

Latest news

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

NSW-வில் 83 வயது முதியவரை தற்செயலாக கத்தியால் குத்திய நபர்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் கார் நிறுத்துமிடத்தில் 83 வயது முதியவர் மீது "முட்டாள்தனமான" மற்றும் "தற்செயலாக" ஒருவர்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...