Newsஅகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழப்பு

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழப்பு

-

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகே செங்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 45 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து புலம் பெயா்வோா் நலனுக்கான ஐ.நா. பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜிபூட்டி கடலோரப் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து மூழ்கியதில் அதிலிருந்த 45 போ் உயிரிழந்தனா்.

310 பேருடன் அந்தப் படகு யேமனிலிருந்து புறப்பட்டது. விபத்துப் பகுதியிலிருந்து 32 போ் மீட்கப்பட்டனா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிபூட்டி கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு பிராந்தியமான கோா் ஆங்கா் கடற்கரைக்கு 150 மீட்டா் தொலைவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்தப் படகிலிருந்த 115 பேரை மீட்டுள்ளோம். எஞ்சியவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவா்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெறுவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனா்.

அவா்களை அகதிகள் கடத்தல்காரா்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றி அழைத்துச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோா் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...