பெர்த்தை சேர்ந்த ஒரு தாய் கோமா நிலையில் இருந்தபோது தனது குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
28 வயதான கிரி ஷீஹான் என்ற தாய் தனது ஐந்தாவது குழந்தை 30 வார கர்ப்பமாக இருந்த போது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
Joondalup Health Campus-ல் அனுமதிக்கப்பட்ட அவர் தனது பிறக்காத குழந்தையின் பாதுகாப்பிற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கப்பட்டார்.
அன்றிரவு சிதைந்த நஞ்சுக்கொடியிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டறிந்தபோது, உயிர்காக்கும் அவசர C-பிரிவை ஷீஹானுக்கு செய்தனர்.
அவர்களுக்கு 1.4 கிலோ எடையுடைய அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குறித்த குழந்தை உடனடியாக ஜூண்டலப்பில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் Subiaco-வில் உள்ள King Edward Memorial மருத்துவமனையில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
ஐந்து நாட்களுக்குப் பின் கோமாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய் மருத்துவமனைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வீடியோ அழைப்புகள் மூலம் தன் குழந்தையை பார்த்து மகிழ்ந்தார்.