Cinemaவீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைகளின் பின்னர், நேற்றிரவு (03) 11.00 மணியளவில் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இருதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்திற்காக ரஜினிகாந்த்துக்கு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், டிரான்ஸ்கேட்டர் முறையில் இரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் கண்காணிப்பில் இருந்தார்.

இந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நேற்றிரவு வைத்தியாசலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், ரஜினிகாந்தை ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல் நிலை முன்னேறியவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் பணியை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் தொலைபேசி சிக்னல்களைக் கண்டறிய புதிய திட்டம்

ஆஸ்திரேலியா முழுவதும் தொலைபேசி சிக்னல்களை சரிபார்க்க தபால் ஊழியர்களைப் பயன்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இலங்கையில் கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவுஸ்திரேலியா தபால்...

விலைவாசி உயர்ந்தாலும் ஆஸ்திரேலியர்கள் வீடு வாங்க ஒரு அரிய வாய்ப்பு

ஆஸ்திரேலியாவின் வீட்டு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீடுகளை வாங்க இன்னும் இடமுள்ளது. Core Logic...

நிதிப் பற்றாக்குறையில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம்

இந்த ஆண்டு 200 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால் வேலைகள் மற்றும் செலவுகளை குறைக்க கான்பெராவில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக...

எரிபொருளைச் சேமிக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனை

தேசிய சாலைகள் மற்றும் வாகன ஓட்டிகள் சங்கம் (NRMA) ஆஸ்திரேலியர்களுக்கு வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பெட்ரோலில் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து ஆலோசனை...

நிதிப் பற்றாக்குறையில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம்

இந்த ஆண்டு 200 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்வதால் வேலைகள் மற்றும் செலவுகளை குறைக்க கான்பெராவில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக...

சமந்தா விவாகரத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை – சமந்தா வெளியிட்ட பதிலடி

சமந்தா விவாகரத்திற்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் காரணம் என்று தெலுங்கானா அமைச்சர் சுரேகா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை...