ஆஸ்திரேலிய குடிமக்கள் லெபனானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள அவுஸ்திரேலியர்கள் தமது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
லெபனானில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு இரண்டு விமானங்கள் அனுப்பப்படும் என வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏற்கனவே 580 அவுஸ்திரேலியர்கள் இதன் கீழ் கொண்டுவர தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1700 ஆஸ்திரேலியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பலர் லெபனானில் உள்ள வெளிவிவகாரத் திணைக்களத்தில் பதிவுசெய்து அவுஸ்திரேலியாவுக்குத் திரும்புவதற்குத் தயாராக இருப்பதாக வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு ஆஸ்திரேலியர்களை பென்னி வோங் வலியுறுத்தியுள்ளார்.