Newsகோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

கோமாவில் இருந்த போது சொர்க்கத்துக்கு சென்ற வைத்தியர்

-

சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி நாம் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். ஒரு சிலருக்கு இந்த கூற்று மீது நம்பிக்கை இருக்கும், சிலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை இருக்காது. மரண வாயிலின் மிக அருகே சென்று மீண்டு வந்த அனுபவம் உள்ள சிலர் சுயநினைவு இன்றி இருந்தபோது தாங்கள் சொர்க்கத்தை அடைந்துவிட்டதை போல உணர்ந்ததாக கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

இந்த நிலையில் கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனக்கு ஏற்பட்ட அசாதாரண அனுபவங்களைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூறிய தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கோமா நிலையில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு ஞாபக மறதி இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறுவது மிகவும் பொதுவானது. ஆனால் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்குச் சென்று திரும்பியதாகக் கூறுவது மிகவும் வினோதமானது அதுவும் அங்கு வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாக கூறினால் எப்படி இருக்கும்??!!

இப்படி கூறுவது ஒரு சாதாரண நபர் அல்ல, பிரபல மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பது தான் இங்கே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியாவைச் சேர்ந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டொக்டர்.எபன் அலெக்ஸாண்டர், E coli தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுயநினைவின்றி கிட்டத்தட்ட ஒரு வாரம் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

பிறகு ஒருவழியாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு அவர் கூறி இருக்கும் தகவல்தான் தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. தான் கோமாவில் இருந்தபோது சொர்க்கத்துக்கு சென்றதாகக் கூறியுள்ள அலெக்ஸாண்டர் அங்கு மேகங்களை கண்டதாகவும், மிகவும் விசித்திரமாக தான் வறுத்த கோழியின் வாசனையை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சொர்க்கம் சென்றது குறித்து மேலும் விவரித்த மருத்துவர், மேகங்களால் சூழப்பட்ட வேறு பரிமாணத்தை அடைந்ததாகவும், மேகங்களுக்கு மத்தியில் ஒரு அழகான நீர்வீழ்ச்சி மற்றும் பசுமையால் தான் சூழப்பட்டிருந்ததாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக இதையெல்லாம் பார்த்து அனுபவித்தபோது தான் ஒரு கம்பளத்தின் மீது பறந்து கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒரு பசுமை நிறைந்த மைதானத்தை கண்டதாகவும், தவிர வானத்திலிருந்து இசைக்கப்படும் பாடல்களை கேட்க முடிந்ததாகவும் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் மருத்துவர் அலெக்ஸ்சாண்டர். கோமாவின்போது தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவங்கள் அனைத்தும் ஏதோ விவரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டிருப்பதை போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவரின் மூளை முற்றிலும் செயலிழந்ததால், உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை மருத்துவர்களுக்கு இல்லாமல், மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். ஆனால் அவரோ கோமாவில் இருந்து மீண்டதோடு மேற்கண்ட அனுபவங்களை தெளிவாக அனுபவித்ததாகவும் மற்றும் சொர்க்கத்தில் ஒரு அழகான பெண்ணை சந்தித்ததாகவும் கூறி உள்ளார்.

கோமாவில் இருந்து எழுந்தவுடன், டொக்டர் அலெக்சாண்டர் முழுமையாக குணமடைய எட்டு வாரங்கள் ஆனது. அவர் குணமடைந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, உறவினர் ஒருவரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மருத்துவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன ஒரு சகோதரி இருப்பதை உறவினர் வெளிப்படுத்தினார். தான் சொர்க்கத்தில் பார்த்த அழகான பெண், தனது சகோதரி என்பதை பின்னர் உணர்ந்ததாக அலெக்ஸாண்டர் கூறி இருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உலக சாதனை படைத்துள்ள Indian Airlines

ஒரே நாளில் 500,000 பயணிகளை ஏற்றி இந்தியன் ஏர்லைன்ஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்தியன் ஏர்லைன்ஸ் நவம்பர் 17, 2024 அன்று ஒரே நாளில் 5...

அதிகம் Diamond Play Button கொண்ட Youtube Channels கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

YouTube சமூக வலைப்பின்னலில் Diamond Play Button மூலம் அதிக எண்ணிக்கையிலான YouTube சேனல்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது . உலக அளவில் Diamond...

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள விக்டோரியா காவல்துறையினர்

விக்டோரியா காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஊதிய நெருக்கடி தொடர்பான பிரச்சனை நியாயமான வேலை ஆணையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் விக்டோரியா காவல்துறை சங்க நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். இவ்வாறானதொரு...

Skilled Migration Program பற்றி ஆஸ்திரேலிய மாநிலத்தின் அறிவிப்பு

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் திறன்மிக்க இடம்பெயர்வுத் திட்டத்தின் (General Skilled Migration Program) குறிப்பிட்ட வேலைத் துறைகளுக்கு அதிக தேவை...

Skilled Migration Program பற்றி ஆஸ்திரேலிய மாநிலத்தின் அறிவிப்பு

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் திறன்மிக்க இடம்பெயர்வுத் திட்டத்தின் (General Skilled Migration Program) குறிப்பிட்ட வேலைத் துறைகளுக்கு அதிக தேவை...

ஆஸ்திரேலியர்களுக்கான இப்போது மலிவாக கிடைக்கும் பிரபலமான கிறிஸ்துமஸ் பரிசு

Amazon Australia இந்த கிறிஸ்துமஸை வாங்குவதற்கு ஆஸ்திரேலியர்களுக்கு "Most Gifted" கிறிஸ்துமஸ் பரிசை சேர்த்துள்ளது. Amazon Australia மூலம் வாடிக்கையாளர்கள் "Most Gifted" கிறிஸ்துமஸ் பரிசை $67.99க்கு...