சிட்னியில் வெளிப்புற இசை நிகழ்ச்சி ஒன்றில் 20 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிட்னி ஷோகிரவுண்டில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டமை தொடர்பில் நேற்றிரவு 11.50 அளவில் அவசர சேவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் பொலிஸாருடன் அவ்விடத்திற்கு வந்த வைத்தியர்கள் அவசர முதலுதவி அளித்த போதிலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
குறித்த நபர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் போலீஸ் கமிஷனர் கரேன் வெப் கூறுகையில், அந்த நபருக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக நம்பப்படுகிறது, மேலும் போதைப்பொருள் விஷம் சந்தேகிக்கப்படவில்லை.