Newsஇரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

இரு மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான வானிலை எச்சரிக்கை

-

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களின் பல பகுதிகளில் கடுமையான புயல் நிலை மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வார இறுதியில் வெப்பம் அதிகரித்தாலும், இந்த இரு மாநிலங்களிலும் திடீரென வானிலை மாறி, கனமழை மற்றும் புயல் வீசும் சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸில் இருந்து பிரிஸ்பேன், டூவூம்பா மற்றும் ஜிம்பி உள்ளிட்ட தென்கிழக்கு குயின்ஸ்லாந்து வரை பலத்த காற்று, பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் புயல் தீவிரமடைவதால் குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலத்த காற்றினால் மரங்கள் அல்லது மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும், குறித்த பகுதிகளில் வாகனங்களை செலுத்தும் போது விசேட கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வியாழன் வரை பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் புயல்கள் தொடரும், மேலும் புயல் அபாயம் வியாழக்கிழமைக்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோர்டன் வளைகுடா மற்றும் கோல்ட் கோஸ்ட் பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கையும் பணியகம் விடுத்துள்ளது.

Latest news

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

71 வயதில் காலமானார் குயின்ஸ்லாந்து முன்னாள் அமைச்சர்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் Gordon Nuttall, புற்றுநோயுடன் போராடி தனது 71 வயதில் காலமானார். Beattie அரசாங்கத்தில் ஒரு மூத்த நபராக Nuttall இருந்தார்....

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் தடுப்பூசி பெறுவது கட்டாயம் – சுகாதார அதிகாரிகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் தடுப்பூசி போடுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது . தேசிய நோய்த்தடுப்பு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மேற்கு ஆஸ்திரேலியாவில் 65 வயதுக்குட்பட்டவர்களில் காய்ச்சல்...

தனது நண்பரை கோபத்தில் தீ வைத்துக் கொளுத்தியுள்ள நியூ சவுத் வேல்ஸ் பெண்

பெண்களுக்கு எதிரான கருத்துக்களால் கோபமடைந்த இளம் பெண் ஒருவர் தனது தோழி மீது எண்ணெய் ஊற்றி தீ வைத்தது தொடர்பான வழக்கு நியூ சவுத் வேல்ஸ்...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...