காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உட்பட குடும்ப உறவினர்கள் 13 பேரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரிய வர பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி பெண் குடும்பத்தில் இருந்த 13 பேருக்கு ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் 13 பேரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் குறித்த பெண்ணை விசாரித்த போது, தான் காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்த காரணத்தால் அதிக கோபம் ஏற்பட்ட நிலையில், ரொட்டி சமைக்கும் கோதுமை மாவில் விஷம் கலந்துள்ளார்.
இதனை அறியாமல் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கோதுமை மாவில் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்த குற்றத்திற்காக இளம்பெண்ணை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.