Newsஉலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் - வைரலாகும் வீடியோ

உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் – வைரலாகும் வீடியோ

-

சமீபத்தில், சீனாவின் Hangzhou-வில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ‘Regent International’ என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடம், 206 மீட்டர் மற்றும் 36 முதல் 39 மாடிகளை கொண்டுள்ளது. ஹாங்சோவின் மத்திய வணிகப் பகுதியான Qianjiang Century City-யில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது.

இது முதன்முதலில் ஆறு நட்சத்திர சொகுசு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஒரு பெரிய குடியிருப்பு வளாகமாக மாற்றப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தற்போது இந்த குடியிருப்புகளில் 20,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேலும், உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் ஒரு சுய-கட்டுமான சமூகம் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் Food court, நீச்சல் குளங்கள், கடைகள், சலூன் மற்றும் cafe உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. குடியிருப்பாளர்களுக்கு தேவையான அனைத்தும் அந்த கட்டிடத்திலேயே கிடைப்பதால், அவர்கள் அரிதாகவே வெளியே செல்ல வேண்டி உள்ளது.

இதற்கிடையில், இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டிடத்தின் வீடியோ X வலைதளத்தில் 150,000 பார்வைகளை கடந்துள்ளது. இந்த பிரம்மாண்ட குடியிருப்பு கட்டிடம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest news

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள்...

“உயிருள்ள எதையும் TV-யில் காட்டக் கூடாது“ – தாலிபான் அதிரடி உத்தரவு

2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது....

காதலிக்கு $4.3 மில்லியன் வீட்டை வாங்கிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக 4.3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியர்கள்...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

இந்தியா – கனடா தூதரக உறவில் விரிசல் – தூதுவர்கள் வெளியேற்றம்

கனடாவில் உள்ள இந்திய தூதுவர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான்...