இந்தோனேசியாவின் பாலி தீவுகளில் குடிவரவு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, சில சுற்றுலாப் பயணிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்கள், அதன் புதிய குடியேற்ற சட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய சட்டங்களின் கீழ், பாலியில் விசா விதிமுறைகள் அல்லது சட்டங்களை மீறும் வெளிநாட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, அந்தச் சட்டங்களின்படி, விசா நிபந்தனைகளை மீறும் வெளிநாட்டவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, புதிய திருத்தங்களின்படி, பாலி மாநிலம் 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் பாலியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை தேடும் சிறப்பு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலியில் ஏற்கனவே 20 ரோந்து கார்கள் மற்றும் 20 ரோந்து மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் 125 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்கும் பயணிகளையோ, 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளையோ அல்லது 60 நாட்கள் தங்குவதற்கு சட்டப்பூர்வமாக விசாவை நீட்டித்த பயணிகளையோ பாதிக்காது.
குடிவரவு மீறல்கள் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது, இந்த ஆண்டு மட்டும் பாலி தீவில் இருந்து 400 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.