ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புளோரிடாவை அடுத்ததாக மில்டன் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஃபுளோரிடா மாகாணத்தில் கரையைக் கடந்த மில்டன் புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மில்டன் புயல் பாதிப்புகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள புளோரிடா மாகாணத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததால் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு அதி தீவிரப் புயலாக மில்டன் கரையைக் கடக்காததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.