உலகின் முன்னணி நிறுவனமான Boeing, தனது உலகளாவிய பணியாளர்களை 10 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேலை வெட்டுக்கள் மூலம் சுமார் 17,000 பேர் வேலை இழப்பார்கள் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தொழிலில் நிலவும் பிரச்னையால், உற்பத்தி தாமதமாகி வருவதே, இந்த பெரிய அளவிலான வேலையிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த முடிவு குறித்து, Boeing நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெல்லி ஆர்ட்பெர்க், விஸ்சன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பணி குறைப்பு காரணமாக அனைத்து நிர்வாக தர அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் பொது ஊழியர்களின் பணியிடங்கள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
விமானத்தின் தரம் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஆகியவற்றில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, தயாரிப்பு துறையில் நஷ்டம் ஏற்பட்டதாக Boeing நிறுவனம் முன்பு தெரிவித்திருந்தது.