சிட்னியைச் சுற்றியுள்ள வழித்தடங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட பேருந்துகள் திரும்பப் பெறப்பட்டு ரத்துசெய்யப்பட்டுள்ளதால், பேருந்துச் சேவைகளுக்குக் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிட்னி போக்குவரத்து அதிகாரிகள் அதிகளவிலான பயணிகள் செல்லக்கூடிய வாகனங்களை வாபஸ் பெறுவதால் பஸ் பயணிகள் கடும் நெரிசலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில பேருந்துகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சீர்த்திருத்தும் நடவடிக்கையின் காரணமாக 83 பேருந்துகள் சாலைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
அந்த வாகனங்களை அகற்றிவிட்டு, இரண்டு கதவுகள் கொண்ட மினிபஸ்களை மாற்றாக அறிமுகப்படுத்தியதால், பயணிகளின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த பஸ்கள் வாபஸ் பெறப்பட்டதால், வடக்கு கடற்கரை, கீழக்கரை, விக்டோரியா சாலை போன்ற சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. .
நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து ஒருங்கிணைப்பாளர் ஹோவர்ட் காலின்ஸ் கூறுகையில், பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க பேருந்து நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எஞ்சிய பஸ்களை அதிகூடிய தேவைகள் கொண்ட சேவைகளுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.