அனுமதியின்றி குடிவரவு ஆலோசனைகளை வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளும் மோசடியாளர்களை தண்டிக்கும் புதிய முறையை நடைமுறைப்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, உரிமம் இல்லாமல் குடிவரவு ஆலோசனை வழங்குவோருக்கு 9 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நியூசிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், குற்றவாளிகளுக்கு 1,600 நியூசிலாந்து டாலர்கள் அபராதம் விதிக்க ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதியின்றி குடியேற்ற அறிவுரை வழங்கிய நியூசிலாந்து நாட்டவர்கள் 3 பேர் இது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்தேக நபர்கள் நியூசிலாந்து சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய குடியேற்றவாசிகளை குறிவைத்து இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் நியூசிலாந்து வீசாவைப் பெறுவதற்காக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறும், குடிவரவு அறிவுறுத்தல்களுக்கு முரணாக சட்டவிரோதமாக தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்தவர்களை இலக்கு வைத்து சந்தேகநபர்கள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றதுடன் அதற்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான சட்ட அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.