Perthபெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் - 3 பேர்...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

-

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle பகுதியில் உள்ள வீட்டின் பின்புற சுவரில் கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காரில் இருந்த மூவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து காரில் இருந்த மேலும் இருவருக்கு ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அடிப்படை சிகிச்சை அளித்து ராயல் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் வீட்டில் உள்ள எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அப்பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

விக்டோரியாவில் உள்ள ஆஸ்திரேலியாவின் மிக விலையுயர்ந்த பள்ளி

ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிகவும் விலையுயர்ந்த பள்ளிகள் எவை என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரவரிசை Edstart-இன் சமீபத்திய வருடாந்திர பள்ளி கட்டண தரவு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என...

பணவீக்கக் குறைப்பால் அதிகப் பயனடையப் போகும் ஆஸ்திரேலியாவின் இரு முக்கிய நகரங்கள்

பணவீக்கக் குறைப்பால் அதிகப் பயனடையப் போகும் ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய நகரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கியின் சிறிய வட்டி விகிதக் குறைப்பால் மெல்பேர்ண் மற்றும்...

கூட்டாட்சி தேர்தலுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர்

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவு எந்த வகையிலும் மாற்றப்படாது என்று உள்துறை அமைச்சர் டோனி பர்க் வலியுறுத்துகிறார். இந்தத்...