வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமான சேவை நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானம் மும்பையில் இருந்து பறந்து கொண்டிருந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்
விமானத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றியதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, லண்டன் நோக்கி பயணித்த விஸ்தாரா விமான சேவைக்கு சொந்தமான விமானம் வெடிகுண்டு பீதி காரணமாக ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இறுதியில் விமானத்தில் எதுவும் இல்லை என விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.