Newsசெல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

செல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

-

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸின் Hunter பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே இளம்பெண் ஒருவர் தலைகீழாக சிக்கிக் கொண்டார்.

தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்த போது 500 கிலோ எடையுள்ள பெரிய இரண்டு பாறைகளின் இடுக்கில் 7 மணி நேரமாக சிக்கிக் கொண்டு தவித்துள்ளார்.

சிக்கலில் சிக்கிய பெண்ணை அவரது நண்பர் விடுவிக்க முயன்ற நிலையில் அது தோல்வியில் முடிந்ததை அடுத்து அவசர சேவைகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், பிரம்மாண்ட பாறைகளை அகற்றி அந்த பெண் வெளியேற ஏதுவான வழியை உருவாக்க கடுமையாக உழைத்தனர்.

கிட்டத்தட்ட 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த பெண்ணை குறுகிய, S வடிவ இடைவெளியின் வழியாக கவனமாக வெளியே எடுத்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த பெண் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும் அந்த பெண்ணின் செல்போன் பாறைகளின் கீழே புதைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...