NewsColes மற்றும் Woolworths-இல் மீண்டும் காணப்படும் போலி தள்ளுபடிகள்

Coles மற்றும் Woolworths-இல் மீண்டும் காணப்படும் போலி தள்ளுபடிகள்

-

Coles மற்றும் Woolworths முழுவதும் ஆயிரக்கணக்கான போலி தள்ளுபடி தயாரிப்புகள் மீண்டும் காணப்படுகின்றன.

போலியான தள்ளுபடி பட்டியல்களில் பால் பொருட்கள், செல்லப்பிராணிகளுக்கான உணவு, சுகாதார கருவிகள், காபி, மருந்து, இனிப்புகள், காலை உணவு, சிற்றுண்டிகள், வீட்டை சுத்தம் செய்யும் பொருட்கள், பாஸ்தா மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளும் அடங்கும்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவுஸ்திரேலிய நுகர்வோர் அதிகாரசபை இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட அதிகமான போலியான தள்ளுபடிகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

67 சதவீத சில்லறை விற்பனையாளர்கள் தள்ளுபடி தருவதாக கூறி போலி தள்ளுபடியில் சிக்குவதாகவும், தினசரி மளிகை பொருட்களை வாங்கும் 39 சதவீத நுகர்வோர் போலியான தள்ளுபடி என்ற போர்வையில் பல்பொருள் அங்காடிகளால் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளான Coles மற்றும் Woolworths-க்கு எதிராக ACCC பெடரல் நீதிமன்றத்தில் தலா ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது, தவறான தள்ளுபடி விலைகள் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாகவும், ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Woolworths சூப்பர் மார்க்கெட் செப்டம்பர் 2021 மற்றும் மே 2023 க்கு இடையில் 20 மாதங்களில் 266 தயாரிப்புகளுக்கு போலி தள்ளுபடியை வழங்கியது, அதே நேரத்தில் பிப்ரவரி 2022 மற்றும் மே 2023 க்கு இடையில் 15 மாதங்களில் 245 தயாரிப்புகளுக்கு போலி தள்ளுபடியை Coles வழங்கியதாக கூறப்படுகிறது.

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...