Newsஇஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

-

கடந்த 19 ஆம் திகதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தனர். அதில் 2 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய இஸ்ரேல் மீது வீசப்பட்ட 5 ரொக்கெட்டுகளில் 4 ரொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், ஒரு ரொக்கெட் திறந்தவெளி பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே போல், டெல் அவிவ் நகரத்தின் மீதும், வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளின் மீதும் சுமார் 20 ரொக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான ரொக்கெட்டுகளை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. அதே சமயம், ஒரு குடியிருப்பு கட்டிடம் மற்றும் சில வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரொக்கெட் தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலில் உள்ள ஹைபா, கிலிலாட் பகுதிகளில் செயல்பட்டு வரும் மொசாட் தலைமையகம் மற்றும் சைபர் உளவுத்துறை பிரிவு ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...