Newsஅவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர்!

-

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சால்ஸ், தலைநகர் கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

மன்னர் தனது உரையினை நிறைவு செய்தபோது, அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுயாதீன பெண் செனட் சபை உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அவர் “நீங்கள் எனக்கு மன்னர் அல்ல” என சத்தமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரத்த குரலில் சுமார் ஒரு நிமிடம்வரை சத்தமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரை, நாடாளுமன்ற பாதுகாவலர்கள் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

பழங்குடி மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடப்பதாகத் தெரிவித்ததுடன், இது உங்கள் நாடு அல்ல எனவும், நீங்கள் எங்களுக்கு மன்னரும் இல்லை எனவும் கூச்சலிட்டுள்ளார்.

இதன் பின்னர் அரச தம்பதியர்களை வரவேற்க காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களைப் பிரித்தானிய மன்னர் மற்றும் மகாராணி ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர்.

பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த நாடாக அவுஸ்திரேலியா திகழும் நிலையில், அதன் தலைவராகப் பிரித்தானிய மன்னரே பணியாற்றுகிறார்.

இருப்பினும், அந்த பதவியிலிருந்து மன்னரை நீக்குவது குறித்து அவுஸ்திரேலியாவில் அண்மைக் காலத்தில் விவாதங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...