Newsவிக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய கஞ்சா தோட்டம்

விக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய கஞ்சா தோட்டம்

-

விக்டோரியா மாகாணத்தின் தெற்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் உள்ள நிலத்தில் ரகசியமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் தொடர்பாக 5 வியட்நாம் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை தெற்கு லியோங்கத்தவில் உள்ள வீடொன்றிற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 25 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட 5 பேரை கைது செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபர்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறைகளில் வர்த்தக நோக்கத்திற்காக கஞ்சா பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

$26 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான இந்த கண்டுபிடிப்பு, விக்டோரியாவின் வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சாவின் மிகப்பெரிய கடத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.7 டன் எடையுள்ள சிறிய செடிகள் முதல் முதிர்ந்த கஞ்சா செடிகள் வரை கையிருப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மொத்தம் 6,525 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன, இதன் தெரு மதிப்பு $26 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும்.

விக்டோரியா காவற்துறையினர் இந்த கஞ்சா செடிகளை அழித்துள்ளதுடன் சந்தேகநபர்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 7 ஆம் திகதி லாட்ரோப் பள்ளத்தாக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...