ஆஸ்திரேலியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 3G Mobile Phone Network குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் 28ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அவுஸ்திரேலியாவில் 3G கையடக்கத் தொலைபேசி வலையமைப்புகளை மூடுவதற்கான தீர்மானத்துடன் இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 3G சாதனங்களைப் பயன்படுத்தினால், அக்கருவிகளை அவுஸ்திரேலியாவில் இயக்க முடியாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 முதல், ஆஸ்திரேலியாவின் Mobile Phone Network ஆபரேட்டர்கள் 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளின் திறன் மற்றும் வேகத்தை அதிகரிக்க 3G நெட்வொர்க்குகளை அணைக்க உள்ளனர்.
3Gயை முடக்குவது 3G சாதனங்களையும் சில 4G சாதனங்களையும் பாதிக்கும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telstra மற்றும் Optus ஆகியவை 28 அக்டோபர் 2024 முதல் தங்கள் 3G நெட்வொர்க்குகளை அணைக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
www.3gclosure.com.au-ஐப் பார்வையிடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட சாதனங்களின் வகைகளைப் பற்றிய தகவல் கிடைக்கும், மேலும் உங்கள் சாதனத்தைச் சரிபார்க்க 000ஐ அழைப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் மொபைல் போன் பாதிக்கப்படுமா என்பதை அறிய 3498 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப 3 என்ற எண்ணை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.