பிரிஸ்பேர்ணின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரிஸ்பேர்ண் Story Bridge-ஐ நிர்வாண மண்டலமாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று நடைபெறுகிறது.
உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ஸ்பென்சர் டுனிக் இன்று அதிகாலை 1 மணி முதல் 9 மணி வரை ஆயிரக்கணக்கான நிர்வாண மக்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கலை கலாசார விழாவுடன் இணைந்து இது நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேர்ண் Story Bridge வரலாற்றில் முதல் முறையாக நிர்வாண மண்டலமாக மாறும் என்பதும் சிறப்பம்சமாகும்.
குறிப்பாக திருநங்கைகளின் கோரிக்கைகளை நினைவு கூர்ந்து கௌரவிப்பதே இதன் நோக்கமாகும் மேலும் பிரிஸ்பேர்ண் நகர சபையும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் ஏறக்குறைய 5000 பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.