Newsஒன்றே குலம் ஒருவனே தேவன் – தவெக இன் தலைவர் விஜய்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் – தவெக இன் தலைவர் விஜய்

-

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அந்த கட்சியின் 4 மணியளவில் தொண்டர்களின் ஆரவார கோஷத்துக்கு மத்தியில் மிகவும் உற்சாகமாக கட்சி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தொண்டர்களின் நோக்கி கையசைத்தப்படி மோடைக்கு வந்தடைந்தார்.

பின்னர் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் ஆசி பெற்ற பின்னர் தனது உரையை தொடங்கினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை. கவனமாக களமாட வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமே? அரசியல் மாறக்கூடாதா? அரசியல்வாதிகளை இகழ்ந்து பேச மாட்டேன். அதுக்காக கண்மூடியும் இருக்க மாட்டேன்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. யாரின் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் நாங்கள் அல்ல.

பெரியார் தான் கொள்கை தலைவர். ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுக்கப்போவதில்லை.

பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெக இன் எதிரி. நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும்.

பத்தோடு பதினொன்றாக, மாற்றுக் கட்சி என சொல்லிக்கொண்டு கூடுதல் சுமையாக வரவில்லை. ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன் என விஜய் கூறினார்.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...