அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள், தனி விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்றத்துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசின் ஒத்துழைப்புடன், சட்டவிரோத குடியேற்றத்தைக் தடுக்கும் நோக்கத்துடன், இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அமெரிக்கக் குடியுரிமை சட்டங்களை அமுல்படுத்தும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரைக் கடுமையாக எதிர்கொள்கிறது.
சட்டரீதியான அடிப்படை இல்லாதவர்களை விரைவாகத் திருப்பி அனுப்புவதும் இந்த நடவடிக்கையில் அடங்கும். இந்தாண்டு மட்டும் இதுவரை, 160,000க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிலிருந்து அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.