Sportsரொனால்டோவை காண 13 ஆயிரம் KM சைக்கிளில் பயணம் செய்த நபர்

ரொனால்டோவை காண 13 ஆயிரம் KM சைக்கிளில் பயணம் செய்த நபர்

-

உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர். கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.

அந்த வகையில் சீன இரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரொனால்டோ, கடந்த பெப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டது. அவரை பார்க்க ஆவலாக இருந்த சீன இரசிகர் காங் இதனால் மிகவும் வருத்தமடைந்தார். இதனையடுத்து அவரை நேரில் பார்க்க சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டார்.

அதன்படி சீனாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சைக்கிளில் வந்து ரொனால்டோவை சந்தித்துள்ளார். இந்த பயணத்தை கடந்த மார்ச் 18-ஆம் திகதி சீனாவில் தொடங்கிய அவர் 7 நாடுகளை கடந்து ஒக்டோபர் 20-ஆம் திகதி சவுதி அரேபியாவை வந்தடைந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.

இறுதியாக ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ரொனால்டோ ஒட்டோகிராப் போட்ட ஜெர்சியையும் காங் பரிசாக பெற்றுக் கொண்டார்.

நன்றி தமிழன்

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...