நேற்று காலை மெல்பேர்ண் மிடில் பார்க்கில் உடற்பயிற்சி செய்யச் சென்ற பல பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தும் வகையில், அப்போது அருகில் இருந்த மற்றுமொரு பெண் தலையிட்டு மோதலை அமைதிப்படுத்த முற்பட்டதாகவும், இந்த தாக்குதலில் அந்த பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் 36 வயதான பெண் பொலிஸாரிடம் கூறுகையில், காலை 6.30 மணியளவில் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சந்தேக நபர் காரணமின்றி தாக்கியதாக தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் அவசர சேவை ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் 46 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் மீது இரண்டு சட்ட விரோதமான தாக்குதல்கள் மற்றும் கடமையில் இருந்த அவசரகால பணியாளர் மீது பல தாக்குதல்கள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குறித்த பெண்ணை எதிர்வரும் டிசெம்பர் மாதம் மீண்டும் மெல்பேர்ண் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.