Newsஉலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தான்

உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தான்

-

பாகிஸ்தானின் லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.

இதையடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோசமான காற்றின் தரம் காரணமாக இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

மக்கள் முகமூடிகள் மற்றும் கண்ணாடிகளை அணிய சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

வெளியே செல்லும்போது முகமூடி அணியவும், சுத்தமான காற்றுக்காக காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பயிர் எச்சங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி, குப்பை, எண்ணெய் அல்லது டயர்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை வளிமண்டலத்தில் நுழைகிறது. இதன் தாக்கம் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றும் மற்றும் பருவத்தின் இறுதி வரை இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...