ஒரு காலத்தில் மெல்பேர்ணில் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா வரை பரவியிருந்த எரிமலை சமவெளி புல்வெளிகள் தற்போது அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன.
Glenelg Hopkins (CMA) மூத்த அதிகாரி பென் சீமான் கூறுகையில், இந்த பூர்வீக புல்வெளிகளில் 1% மட்டுமே இன்று எஞ்சியிருப்பதாகவும், கிராமப்புறங்களில் சாலையோரங்கள் மற்றும் தனியார் விவசாய நிலங்களின் சிறிய திட்டுகளாக புல்வெளிகள் இருப்பதாகவும் கூறினார்.
விக்டோரியா மாநில தீயணைப்பு அதிகாரசபையின் (CFA) சில செயற்பாடுகளினால், எஞ்சிய புல்வெளிகள் பாதுகாக்கப்பட்ட போதிலும், இந்த தடாகத்தில் உள்ள பல தாவரங்கள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Glenelg Hopkins (CMA) இன்ஸ்டிட்யூட்டின் பில்லி பட்டன் உள்ளிட்ட அதிகாரிகள், அழிந்து வரும் 17 வகையான தாவரங்களை பாதுகாக்க முயற்சி செய்து, இந்த தாவரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புல்வெளிகளில் தாவரங்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
பென் சீமான் மேலும் கூறுகையில், மற்ற ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த புல்வெளிகளின் மண்ணில் விதை வங்கி இல்லாததால் மீண்டும் நடவு செய்வது மிகவும் கடினமான பணியாகும்.
எஞ்சியுள்ள இந்த சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க, நில உரிமையாளர்கள் மற்றும் நிலப் பாதுகாப்புக் குழுக்களுடன் Glenelg Hopkins (CMA) செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.