Melbourneஇன்று முதல் அதிகரிக்கப்படும் மெல்பேர்ண் விமான நிலைய பார்க்கிங் கட்டணம்

இன்று முதல் அதிகரிக்கப்படும் மெல்பேர்ண் விமான நிலைய பார்க்கிங் கட்டணம்

-

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மெல்பேர்ண் விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகரித்துள்ளது.

இன்று (04) முதல் மெல்பேர்ண் விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் சுமார் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் தினசரி கட்டணம் 12 டொலர்களில் இருந்து 14 டொலர்களாக அதிகரிக்கவுள்ளது.

டெர்மினல் மற்றும் முன்னுரிமை போக்குவரத்து நிறுத்தத்திற்கான ஒரு நாள் கட்டணங்களும் $5 அதிகரிக்கும் மற்றும் அவற்றின் புதிய விலைகள் முறையே $54 மற்றும் $84 ஆக இருக்கும்.

இதுகுறித்து மெல்பேர்ண் விமான நிலையம் கூறியுள்ளதாவது, முன்கூட்டியே ஆன்லைன் முறை மூலம் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கினால் இந்த விலை உயர்வை முற்றிலும் குறைக்க முடியும்.

கடந்த வர்த்தக ஆண்டில் மட்டும் மெல்போர்ன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் மூலம் 243 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்துள்ளதுடன் அந்த ஆண்டின் ஒரு நாளின் வருமானம் 660,000 டாலர்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

“நார்ம் வழி” திட்டத்தினால் சுமார் 2000 வாகன நிறுத்துமிடங்கள் அகற்றப்பட்டுள்ள பின்னணியில் இந்த விலை அதிகரிப்பு இன்று (04) முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

Latest news

ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிடும் அறிவிப்புகளுக்கு அவசரம் காட்ட வேண்டாம் – உலக வங்கி தலைவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகள் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட உலக வங்கியின் தலைவர் அஜய்...

தைவானில் பச்சோந்திகளை கொல்ல அதிரடி உத்தரவு

தைவானில் உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவானில் 1.2 லட்சம் பச்சோந்திகளைக் கொல்லும் முடிவை தைவான் அரசு அறிவித்துள்ளது. அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas)...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள்

அதன் 2025 உலக அறிக்கையில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் மனித உரிமைகளை மீறுவதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறது. இளைஞர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய...

மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடிய 13 கோடி பேர்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா நிகழ்ச்சியில், உயர் தொழில்நுட்பம் கொண்ட சமையலறையில் உணவுகள்...