நியூ சவுத் வேல்ஸுக்கு சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்று துரதிர்ஷ்டவசமான நிகழ்வு ஒன்றை சந்தித்துள்ளது.
NSW மத்திய கடற்கரையில் 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தந்தையும் நான்கு பிள்ளைகளும் கடலில் உல்லாசமாக இருந்ததாகவும், மூத்த குழந்தை கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றியிருந்தவர்களின் உதவியால் மற்ற குழந்தைகளையும் தந்தையையும் காப்பாற்ற முடிந்தது.
கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையின் சடலத்தை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் உள்ளிட்ட கடற்படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல் துறை மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மீட்பு ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இந்த நாட்களில் நிலவும் வெப்பநிலையுடன், கடல் பகுதிகளுக்கு அதிகளவான மக்கள் வருவதாகவும், நீரில் மூழ்கும் அபாயம் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.