இந்த கோடையில் விக்டோரியாவில் பல இடங்களில் Pill Testing-ஐ மேற்கொள்ள மொபைல் சேவைகள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதுடன், நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் சட்டவிரோத போதைப் பொருட்களை சட்டப்பூர்வமாக சோதனை செய்ய முடியும்.
கடந்த ஆண்டு இசைக் கச்சேரிகள் தொடர்பான சட்டவிரோத போதைப்பொருள் சோதனைகளை துணை மருத்துவர்கள் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் 46 பேர் உயிரிழந்தனர்.
விக்டோரியா மாநிலம் இந்த நிலையை கட்டுப்படுத்த மாத்திரை சோதனை முறைகளை பின்பற்ற முயன்றது. மேலும் ACT மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்கள் ஏற்கனவே மாத்திரை சோதனையை சட்டப்பூர்வமாக்கியுள்ளன.
அதன்படி, மாத்திரை பரிசோதனையை சட்டப்பூர்வமாக்கிய மூன்றாவது மாநிலமாக விக்டோரியா மாநிலம் திகழ்வது சிறப்பம்சமாகும்.
விக்டோரியாவில் ஏற்கனவே 31 மாத்திரை பரிசோதனை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஊக்கமளிக்கவில்லை எனவும், அதனால் ஏற்படும் உயிராபத்தை கட்டுப்படுத்துவதற்காகவே எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.