Newsஇலங்கையர் ஒருவருக்கு கிடைக்கும் NT Australian Of The Year விருது

இலங்கையர் ஒருவருக்கு கிடைக்கும் NT Australian Of The Year விருது

-

வடக்கு பிரதேச (NT) மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த ஆண்டின் சிறந்த அவுஸ்திரேலியர் விருதுக்கு இலங்கையர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இலங்கை இளைஞரான நிலேஷ் திலுஷன் என்பவருக்கே இந்த விருது வழங்கப்படவுள்ளது.

NT State Young Australian of the year விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

NT மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலியன் விருது 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுவதும், மாநிலத்தின் இளம் ஆஸ்திரேலியன் பிரிவில் நிலேஷ் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிலேஷ் திலுஷன் இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றவர்.

அவுஸ்திரேலியாவில் பல்வேறு பின்னணியில் உள்ள இளைஞர்களை அவர்களது சமூகத்திற்கு சேவை செய்ய ஊக்குவிப்பதிலும் ஒன்றிணைப்பதிலும் நிலேஷ் திலுஷன் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளார்.

NT இல் பல்வேறு தன்னார்வ சேவைகளில் ஈடுபட்டுள்ள இளைஞரான இவர், FINSMART மற்றும் Jumpstart போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து புலம்பெயர்ந்த இளைஞர் சமூகத்திற்கு வேலை தேடுதல் போன்ற பல திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

குறிப்பாக மொழியினால் பல சிரமங்களை எதிர்நோக்கி வரும் புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி நிலேஷ் திலுஷன் இந்த ஆண்டு NT மாநிலத்தில் ஆண்டின் இளம் ஆஸ்திரேலியராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...