Newsஆஸ்திரேலிய மைதானங்களில் மின்னணு விளம்பரங்களுக்கு தடை

ஆஸ்திரேலிய மைதானங்களில் மின்னணு விளம்பரங்களுக்கு தடை

-

மைதானத்தில் மின்னணு பக்கவாட்டு விளம்பரங்களை தடை செய்ய ஆஸ்திரேலிய அரசு தயாராகி வருகிறது.

சூதாட்ட நடவடிக்கைகளுக்கு பூரண தடை விதிக்க வேண்டும் என பின்வரிசை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அறிவித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AFL மற்றும் NRL போட்டிகளின் போது, ​​மைதானங்களுக்குள் இருக்கும் மின்னணு பக்க பலகைகளை அகற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய online sports betting நிறுவனங்கள் வெளியிடும் கவர்ச்சிகரமான டிஜிட்டல் விளம்பரங்களை நிறுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

விளையாட்டு அணிகளின் சீருடையில் இருந்து பந்தயம் கட்டும் நிறுவனங்களின் சின்னங்களை நீக்கும் திட்டம் குறித்து தொடர்பாடல் அமைச்சர் Michelle Rowland யும் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசுகள் மற்றும் பிராந்திய அரசுகளின் ஒப்பந்தம் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்படும் பிரபலமான பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் உள்ள சிறந்த பெயர்களை ஆராய்ச்சி நிறுவனமான McCrindle-இல் பகுப்பாய்வு...

பார்கின்சன் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழு ஒன்று பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் மேலும் மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பார்கின்சன்...

விக்டோரியன் நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இரட்டிப்பு தண்டனை

விக்டோரியன் மேல்முறையீட்டு நீதிமன்றம், விக்டோரியன் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு LH Holding Management ஊழியர் ஒருவர் Forklift வாகனத்தில் சிக்கி...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...

வேலை அழுத்தம் காரணமாக கோகைன் பயன்படுத்திய ஆஸ்திரேலிய அரசியல்வாதி

வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்க கோகைனைப் பயன்படுத்திய ஒரு அரசியல்வாதி பற்றிய செய்திகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ளன. முன்னாள் மாநில லிபரல் தலைவரான 40 வயதான டேவிட் ஸ்பியர்ஸ்,...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...