இந்த நாட்களில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவும் அபாயம் காணப்படுவதால், விக்டோரியா மாகாணத்தின் வடமேற்கு பிராந்தியத்தில் இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் தீ பரவுவதை தடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் Mallee பிரதேசத்தில் இன்று வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் காற்றுடன் கூடிய வெப்பமான காலநிலை நிலவுவதாகவும், வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் மத்திய பிரதேசத்தில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்திலும், உயரமான பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீற்றர் வரையிலும் காற்றின் வேகம் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு கடினமான பணியாக இருக்கும் என்று கவுண்டி தீயணைப்பு ஆணையத்தின் (CFA) தலைமை அதிகாரி Jeson Heffernan தெரிவித்தார்.
இந்த தடையின் கீழ், திறந்த வெளியில் தீ மூட்டுதல் உள்ளிட்ட தீ விபத்து ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.