அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார்.
அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் 64,041,631 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். ஜனாநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸ் 59,329,815 வாக்குகளைப் பெற்று ட்ரம்பை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.