Newsஅவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன்...

அவுஸ்திரேலியாவில் வீடு புகுந்து கொல்லப்பட்ட பிரிட்டிஷ் பெண்: கொலை வழக்கில் சிறுவன் விடுவிப்பு

-

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து கொலை செய்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்களில் ஒருவர் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு Boxing தினத்தன்று 41 வயதான Emma Lovell என்ற பெண்மணி வீட்டை உடைத்து உள்ளே புகுந்த இரண்டு சிறுவர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவர் தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்.

இந்நிலையில் சந்தேக நபரான மற்றொரு சிறுவன் மீதான விசாரணை நீட்டிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் கொலைக்கான தூண்டுதல் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் இந்த சிறுவன் தன்னுடைய கூட்டாளி கத்தி வைத்து இருந்ததை அறிந்து இருந்தானா என்பதற்கான என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இல்லை என்று நீதிபதி விவரித்து இந்த தீர்ப்பினை வழங்கினார்.

இருப்பினும் எம்மா லவல் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நடத்திய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கான தண்டனை டிசம்பரில் விதிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், சிறுவன் மீதான கொலை குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டதற்கு Emma Lovell-இன் கணவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...