Newsஅமெரிக்காவை ஆக்கிரமித்த செந்நிறம் – ட்ரம்பின் வெற்றியும் ஹரிஸின் தோல்வியும்

அமெரிக்காவை ஆக்கிரமித்த செந்நிறம் – ட்ரம்பின் வெற்றியும் ஹரிஸின் தோல்வியும்

-

அமெரிக்கா மாத்திரமல்லாது உலகம் முழுவதும் அமெரிக்காவின் ஜனாதிபதி யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மாறியுள்ளார்.

அமரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹரிஸும் போட்டியிட்டிருந்தார்கள்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ அதாவது வாக்காளர் குழு நடைமுறை பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், ட்ரம்ப் 266, கமலா ஹாரிஸ் 205 என்ற எண்ணிக்கையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

அதன்படி, இந்த தேர்தலில் முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கைகளின் படி ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, புளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்தது.

அதேபோல கமலா ஹரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயோர்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியிருந்தாலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...