கிழக்கு அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அடுத்த சில தினங்களில் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் அந்த பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை உயர்வினால் ஏற்பட்ட வெப்ப அலைகளின் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
30 பாகை செல்சியஸுக்கு மேல் அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் மேற்கிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக கிரேட்டர் சிட்னி பகுதியில் பூரண தீ தடுப்பு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை பிறிஸ்பேனில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும், அடுத்த சில நாட்களில் பல மாநிலங்களில் வெப்பநிலை உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் பணியகம் (BoM) முன்னர் அறிவித்த வெப்ப அலை எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், இந்த நிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த வெப்பமான காலநிலை அடுத்த வாரம் வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் (BoM) மேலும் தெரிவித்துள்ளது.