எதிர்வரும் சில தினங்களில் குயின்ஸ்லாந்து மக்கள் இடியுடன் கூடிய மழை மற்றும் அனல் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் புயல் மற்றும் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில், சார்ல்வில்லி பகுதிக்கு கிழக்கே, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
கேப் குடாநாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் புயல் நிலை காரணமாக பெருமளவான மின்னல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புயல் நிலை காரணமாக உளுருவில் இருந்து 800 கிலோமீற்றர்களுக்குள் உள்ள பிரதேசத்தில் 719,068 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.