News$26 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிகவும் ஆடம்பரமான வீடு

$26 மில்லியனுக்கு விற்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிகவும் ஆடம்பரமான வீடு

-

Vauclise இல் உள்ள 10 Queens Avenue-இல் உள்ள ஒரு ஆடம்பரமான 4 படுக்கையறை சொகுசு “Sydney Harbour Mansion” $26 மில்லியனுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த சொகுசு வீடு வாரத்திற்கு 7000 டாலர்கள் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வீடு அமைந்துள்ள தெரு ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த குடியிருப்பு தெருக்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதியில் சராசரி வீட்டின் சராசரி விலை 7.9 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி துறைமுகம் சிறப்பாக காட்சியளிப்பதால் வீட்டின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வீட்டில் 5 சொகுசு கார்களை நிறுத்துவதற்கு இடவசதி உள்ளது மேலும் வீட்டிலிருந்து குயின் பீச் மற்றும் மில்க் பீச் செல்ல மிகவும் எளிதானது.

X Pace Design Group வடிவமைத்த இந்த வீட்டில் ஓய்வெடுப்பதற்கான இடங்கள், திரைப்படம் பார்க்கும் இடத்துடன் கூடிய ஆடம்பரமான காட்சிப் பகுதி, பார்ட்டிகள் நடத்துவதற்கான இடங்கள், உயர்தர சமையலறை மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...