அடுத்த 48 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு விக்டோரியா மற்றும் கிப்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இன்று பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் (BoM) எதிர்பார்க்கிறது.
விக்டோரியா மாகாணத்திற்கு வானிலை ஆய்வு மையம் (BoM) எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மாநிலத்தில் புயல் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், 150 கிலோமீற்றர் வேகத்தில் காற்று மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய கடும் மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு கடுமையான புயல் நிலை கிழக்கு நோக்கி நகரும் எனவும் அந்த நிலை சிட்னி கடற்கரை மற்றும் சில பகுதிகளை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மேனியா மாகாணத்தில் வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் பணியகத்தின் (BoM) இணையத்தளத்தில் காணப்படும் வானிலை எச்சரிக்கைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.