Newsகுயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

குயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அம்மாநில மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Night Life வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த முறை பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Daylight Saving முறையை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பாலான குடியிருப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ள பின்னணியில், மற்ற மாநிலங்களைப் போன்று குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் Daylight Saving முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அறிமுகப்படுத்துவது அவசியம் என்று இதுபற்றி குரல் கொடுத்து வரும் தொழில் அதிபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இரவு வாழ்க்கைப் பொருளாதாரம் Daylight Saving முறையை விட அதிகம் தேவைப்படுவதாக அவுஸ்திரேலிய தேசியக் கட்சியின் தலைவர் டேவிட் லிட்டில்ப்ரூட் தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...